தமிழ் தேசியத்தின் அடையாளம் என்று சிறீதரனைக் கூறுவதெல்லாம் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளாததின் வெளிப்பாடு.
சிறீதரனை புகழ்வதாக நினைத்து 76 வருட கால போராட்டத்தினை கொச்சைப்படுத்துகின்ற ஒரு விடயமாகவே இது காணப்படுகிறது.
இவ்வாறு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்தினை வாழ்வாதாரத்திற்காகப் பெற்றுக்கொடுத்த, கூட்டு பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளியின் சீடனும், அக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளித்து விடுதலை வழங்கக்கோரிய விக்னேஸ்வரனை தேசியத் தலைவராக உருவாக்க முற்பட்டதும் இதே கூட்டம் தான்.
கெளிறு அல்லது கெளுத்தி மீனுக்கு மீசை இருக்கிறது என்பதற்காக கெளிறு அல்லது கெளுத்தி எல்லாம் புலிகளாகிவிட முடியாது. மீசை வைத்தவனெல்லாம் ‘தலைவன்’ ஆகிவிட முடியாது என்பதே இங்கு நிதர்சனம்.