Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் என் அமுலில் உள்ளது; எதிர்க்கட்சி

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் என் அமுலில் உள்ளது; எதிர்க்கட்சி

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் அப்போது இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் தற்காலிக சட்டமாக இயற்றப்பட்டது. 3 தசாப்த கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து, 15 வருடங்களுக்கு மேலாகியும் இந்த சட்டத்தை அமுலாக்கும் விடயத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அரசுக்கு எதிரான போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இலங்கை கையொப்பமிட்ட மற்றும் அதற்குக் கட்டுப்பட்ட சர்வதேச சட்டங்கள் தொடர்பிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும் வெளியிலும் கருத்து தெரிவித்திருந்தமையால், இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறிது தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (08) பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், அதனைத் திருத்துவதற்கு அரசாங்கம் முன்வைக்கும் மாற்றுத் தீர்வுகள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், 72 மணிநேரம் தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து தொடர்பிலும், இந்த சட்டத்தின் கீழ் வாரண்ட் இல்லாமல் கைது செய்வது உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்
செய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்

September 29, 2026
11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!
செய்திகள்

11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!

September 29, 2026
4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!
செய்திகள்

4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!

September 29, 2026
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!
செய்திகள்

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!

September 29, 2026
உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு
செய்திகள்

உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு

September 29, 2026
திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்

September 29, 2026
Next Post
உப்புவெளி பொலிஸ் பிரிவில் 254 துப்பாக்கி ரவைகள் மீட்பு

உப்புவெளி பொலிஸ் பிரிவில் 254 துப்பாக்கி ரவைகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு