தென்மேற்கு பிரான்சில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 1,100 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ பரவியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, சுமார் 525 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, மேற்கு ஜெர்மனியிலும் காட்டுத்தீ பரவி வருவதால், அப்பகுதிகளில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







