Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சைகை மொழி தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 35ஆவது குழு அமர்வில் பங்கேற்பதற்காக புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் (14) நாளையும் (15) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைமையகத்தில் நடைபெறும் இந்த அமர்வில், விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை சமர்ப்பித்துள்ள முதலாவது அறிக்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கீழ் கடந்த 18 மாதங்களில் விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கிய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விசேட தேவையுடைய ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விசேட தேவையுடையவர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக செயற்பட்டு, சட்டவாக்க நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், குறித்த சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, விசேட தேவையுடையவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு, நீர்வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சுக்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!
செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

November 12, 2026
அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!
செய்திகள்

அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

November 12, 2026
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
செய்திகள்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

November 12, 2026
பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
செய்திகள்

பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

November 12, 2026
நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
செய்திகள்

நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

November 12, 2026
பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!
செய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!

November 12, 2026
Next Post
கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு