மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில், வீதியைவிட்டு விலகிய வேன், மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதுடன், சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு வேகமாக பிரயாணித்த வேன் வேக கட்டுப்பாட்டை மீறி, வீதியைவிட்டு விலகி, மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மின்சாரதூண் உடைந்து வீழ்ந்ததையடுத்து அந்த பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
இதன் போது சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.