கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு, 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை – உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று (30) இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டு குறித்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.
இங்கு உரையாற்றிய கிழக்கு ஆளுநர், வழங்கப்பட்டிருக்கும் அனைந்து நியமனக்கடிதங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் தவறாது 5 வருடங்கள் பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.
அவ்வாறு பாணியற்றிய பின்னரே நீங்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இடமாற்றம் என கருதி நாளையதினம் எவரும் கல்வி அமைச்சுக்கோ அல்லது ஆளுநர் அலுவலகத்திற்கோ வருகை தர வேண்டாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.