Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!

மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!

23 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்திற்கு அருகில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு கண்காட்சியில் 28,341 உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெயர்ப்பட்டியலில் தமிழர்களுக்கு மேலதிகமாக சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் கடந்த நவம்பர் 21ஆம் திகதி இந்த நினைவுக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்த இரண்டு சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் தனியான பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் இந்த வரலாற்றில், ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருந்தமையை இந்தப் பெயர்ப்பட்டியல் வெளிப்படுத்துவதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவுப் பெயர்ப்பலகைக் கண்காட்சி, மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது.

உயிரிழந்த தமது உறவினர்களைத் தனிப்பட்ட ரீதியில் நினைவுகூருவதற்கு அனுமதி உள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது மீளச் செயற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு

November 26, 2026
செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்

November 26, 2026
வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 26, 2026
எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

November 26, 2026
கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!
செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!

November 26, 2026
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு