மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தனது உத்தியோகபூர்வ கடமைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காமினி ஜயசிங்க தனது பதவியிலிருந்து விலகுவதற்கான காரணம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, மேல் மாகாண ஆளுநரினால் காமினி ஜயசிங்க குறித்த அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது பதவி விலகல் கடிதம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.







