Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரித்தால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிச்சுமை குறையும்

சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரித்தால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிச்சுமை குறையும்

2 years ago
in செய்திகள்

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்று வியாழக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு வந்தேன்.

அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மூவரே வைத்திய அதிகாரிகளாகப் பணியாற்றினர்.

இன்று 350 பேர் பணியாற்றுக்கின்ற நிலைமைக்கு வந்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை சாம்பலிருந்தே மீண்டெழுந்திருக்கின்றது.

தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளது.

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும்.

அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திறந்து வைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கும்.

முக்கியமாக கடந்த டிசெம்பர் மாதம் பரவிய எலிக்காய்ச்சலை இங்குள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்துறையினர் இணைந்து கட்டுப்படுத்தினர்

இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மிகச் சிறந்த பாராட்டைத் தெரிவித்துள்ளது. இது உங்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு