Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக மாநட்டில் வைத்தே அவர் இதனை வௌிப்படுத்தியிருந்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஓதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.

அதன் பின்னர் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் சட்டமூலம் தகவலை பெற்ற போது எருவில் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதில் முதலில் கிழக்கிலுள்ள மைதானத்துக்கு எனவும் பின்னர் இரண்டாவது முறை எருவில் தெற்கு மைதானத்துக்கு என எழுத்து மூலமாக தகவல் தந்தனர். இவ்வாறு முன்னுக்கு பின் முரணான தகவல்தரப்பட்டுள்ளன.

அதேவேளை இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்துக்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாக மாவட்ட செயலகம் தகவல் அறியும் சட்ட மூலமாக தெரிவித்திருந்தது.

அது தொடர்பான மேலதிக தகவலை கேட்டிருந்த போது பிரதேச செயலாளர், அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

இருந்தும் கடந்த 3ம் திகதி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவலின்படி மாவட்ட அரசாங்க அதிபரால் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தகவலை வழங்கியுள்ளனர்.

அதன்படி இராசமாணிக்கம் ஞாபகாத்த மண்டபம் என இருந்ததை அந்த மண்டபம் ஊடாக பிள்ளையர் ஆலய பரிபாலனசபைக்கு அந்த 2 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி கொண்டிருப்பதன் காரணத்தினால் பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது.

மாவட்ட செயலகத்தில் இருந்து வருகின்ற ஒரு தகவல் அதேபோன்று பிரதேச செயலகத்தில் முதற்கட்டமாக ஒரு தகவல் பிறகு இல்லை எனவும் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ளது என வருகின்றது.

இவ்வாறு தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படுகின்ற விடயங்கள் சரியானமுறையில் தகவலாக வழங்கப்படவில்லை.

அதேபோன்று 400 மில்லியன் ரூபா நிதியில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது? எவ்வளவு நிதி திருப்பி அனுப்பபட்டுள்ளது? என்ற தகவலை கேட்ட போது மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இந்த சட்டத்தின் சரத்தின் 5 கீழ் இந்த தகவலை வழங்கமுடியாது என கடிதம் வழங்கியுள்ளார்.

எனவே இது தனிநபர் சார்ந்த விடயம் அல்ல சட்டத்தின் பிரகாரம் தகவல் வழங்கவேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும்

சத்தியசாஜிபாபா சமுத்தி மற்றும் சக்தி இல்லத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். இதில் சத்தியசாஜிபாபா சமுத்தி என்பது பாரிய நிதிவசதியை கொண்டது அவர்கள் இலவச மருத்துவம் உட்பட பல வேலைகளை செய்துவருகின்றனர்.

அதேவேளை சக்தி இல்லம் ஒரு தனியாரது இதுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவசர அவசரமாக வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சரியான திட்டமிடல் இன்றி இந்த நிதியினை மோசடி செய்துள்ளனர்

அவ்வாறே எருவில் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதுடன், தற்போது ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியில் கிட்டத்தட்ட 27 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அதே தமிழரசு கட்சியினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் பிரதேச செயலகம், மற்றும் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் செய்துள்ளார்.

இவ்வாறு மிக மோசமான முறையில் நிதிகள் ஒதுக்கப்பட்டு அவர்களுடைய ஆதரவாளர்கள் மூலம் அந்த நிதி சுரண்டப்பட்டு பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முறையான அபிவிருத்தி இடம்பெறவில்லை மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது

எனவே இவ்வாறுனவர்களை மக்கள் தெரிவு செய்வதனால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடங்கிய ஆவனங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இலங்கை கணக்காய்வாளர்கள் திணைக்களம், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளதுடன், இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
Next Post
12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.