Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்; ஜனாதிபதி அநுர

காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்; ஜனாதிபதி அநுர

2 years ago
in செய்திகள்

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருன்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று (28) நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார்.

அவ்வாறு இல்லாமல் பழைய அரசியலிலே இருந்தால் அரசியலை விட்டு விலகுவதை தடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாதாள உலகின் குற்ற குழுக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரினதும் ஆசிர்வாதம் கிடைக்காதெனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இலங்கை இராணுவத்தையும், பொலிஸையும் தொழில்சார்புடைய இராணுவமாகவும் பொலிஸாகவும் மாற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, பாதுகாப்பு துறையின் எந்தவொரு இடமாற்றத்தையும் நட்பு மற்றும் அரசியல் அடிப்படையில் செய்யப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு ஏழு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் நியமனங்களை வழங்குவதால் புதிய பயணத்தை செல்ல முடியாது என்பதால் புதியவர்களுக்கு நியமனங்கள் வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நபரொருவருக்கு பக்கச் சார்பான இராணுவத்திற்கு பதிலாக நாட்டுக்கு சார்பான இராணுவம் ஒன்றை உருவாக்கவும் தொழில்சார்பு தன்மையை மேம்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலத்தால் மறைந்திருக்கும் குற்றச்செயல்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் எடுக்குமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு துறையின் கட்மைப்பின் மீதான நம்பிகையின் அடிப்படையிலேயே ஒழுக்கம் கட்டியெழுப்பப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்கயீனத்தின் பாதாளம் வரையில் சென்றுள்ள இந்த நாட்டை மீண்டும் ஒழுக்கத்தை நோக்கி கொண்டுச் செல்ல தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் எதிர்க்கட்சியின் கனவு தற்போது முற்றுப்பெற்றுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடியிருப்பதாக காண்பித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் எதிர்கட்சி தற்போது இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறினார்.

இம்மாதத்தில் நடந்த ஐந்து குற்றச் செயல்களை விசாரணை செய்யும்போது ஐந்து குழுக்களினால் அந்த குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது தமது பக்கம் விசாரணைகள் வருவதை குற்றச் செயல்களை செய்வோர் அறிந்துகொள்வதாகவும், அவ்வாறு பல குற்றக் குழுக்கள் ஒரே சமயத்தில் இயங்குவது சூழ்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டு அதனை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் சூழ்ச்சிகளால் ஆட்சி மாற்றம் செய்த காலம் முடிந்துவிட்டதாகவும், ஒழுக்கத்தினால் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகார தரப்பை குற்ற குழுக்கள் அற்றதாக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
செய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!

September 11, 2026
FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

September 11, 2026
சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!
செய்திகள்

சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!

September 11, 2026
மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
செய்திகள்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

September 11, 2026
அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!
செய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைவு; நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்!

September 11, 2026
கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ
செய்திகள்

கோட்டா சிஐடியில்-விமானக் கொள்வனவுகள் கமிஷன் இல்லாமல் செய்யமுடியாது; சொனால் பெர்னாண்டோ

September 11, 2026
Next Post
கோறளைப்பற்று பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

கோறளைப்பற்று பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.