Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை முஸ்லிம் மக்கள் மீது அவதூறு; அரசு மீது ரவூப் ஹக்கீம் அதிருப்தி

கல்முனை முஸ்லிம் மக்கள் மீது அவதூறு; அரசு மீது ரவூப் ஹக்கீம் அதிருப்தி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்துக்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்ற செய்தி அரசாங்கம், பொது மக்களையும், சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு நடவடிக்கையாவென தோன்றுகிறது. அதனால் அரசாங்கத்துக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றிருந்தால் நேரடியாக விசாரணை செய்ய வேண்டும் அதனைவிடுத்து, தவறான செய்தியை சித்தரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தக் வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக்கொண்டு அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத எண்ணக்கருவை உருவாக்கி இருப்பது கவலைக்குரிய விடயமாகும். சில அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் கடந்த 10 நாட்களாக நாட்டுக்குள் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டு வந்தன.

கல்முனையில் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து காட்டியிருந்தார்கள். அவர்களை அடிப்படைவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்றார்கள்.

கல்முனை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். சாய்ந்தமருதில்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.அந்த மக்கள்தான் அது தொடர்பான தகவல்களை வழங்கி இருந்தார்கள். அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடியவர்கள்.

இது சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு இல்லாமல் அதனை ஊடகங்களுக்கு தெரிவித்து ஒட்டுமொத்த மக்களையும் கஷ்டத்துக்கு உள்ளாக்காமல் அதற்கு நடவடிக்கை எடுங்கள்.

குறிப்பிட்ட நகருக்கு உண்மையில் சமய ரீதியில் தீவிரவாத கருத்துக்கள் இருந்தால், அந்த சமுதாயத்தில் உள்ள தலைவர்கள் அவருடன் சம்பந்தப்பட்டு அது குறித்து பார்க்க முடியும். அதைவிடுத்து அவரை ஒரு தீவிரவாதியாக அடையாளப்படுத்துவதும், பின்னர் தீவிரவாதியாக முடியும் என அடையாளப்படுத்துவதுவதானால் என்ன கிடைக்கப்போகிறது.

சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு வராமல் இருக்கப்போகிறார்கள். இது தேவையற்ற குழப்பம். முஸ்லிம் சமூகத்தின் தலைவன் என்றவகையில் கூறிக்கொள்வது, அரசாங்கத்துக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றிருந்தால் நேரடியாக விசாரணை செய்யுங்கள். இதனை பொதுவாக ஊடகங்களில் தெரிவித்து தவறான செய்தியை சித்தரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தக் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அரசாங்கம் தெரிவிக்கும் குழு தொடர்பில் எங்களுக்கு பல வருடங்களாக தெரியும். ஒவ்வொரு சமூகத்திலும் இவ்வாறான அடிப்படைவாத கருத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா சமயத்தவர்களும் இப்படியான அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். பாஸ்டர் ஒருவர் இருக்கிறார், அவர் ஏனைய சமயங்களை அவமானப்படுத்துகிறார்.

அதற்காக உள்நாட்டில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள். அதனைவிடுத்து தேவையற்ற குழப்பத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டாம். சிங்கள ஊடகங்கள் இதனை பாரதூரமான விடயமாக்கி கதைகளை சித்தரித்து வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்கள். வெறுப்புணர்வை உருவாக்கப்பாக்கிறார்கள். எனவே இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சட்டம் ஓழுங்கை தவறவிட்டுள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அவர்கள் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு விடயம்தானா கிழக்கு மாகாணத்துக்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த செய்தி என கேட்கிறோம். நாட்டில் அமைதியை குழப்புவதற்கான ஒரே மாதிரியான விடயத்தைத்தான் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அதனால் அரசாங்கம் இதற்காக அனைத்துக்கும் சாட்சியங்களை நிலைநிறுத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டும். இவர்கள் தீவிரவாதிகள் என சாத்தியப்படுத்துவதற்கு சாட்சியங்கள் தேவை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட தீவிரவாதம் அடிப்படைவாதம் தொடர்பில் பேசுகிறார். அது அவர்களின் சிறப்புரிமை. ஆனால் வெளியில் இதைப்பற்றி பேசினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே கல்முனை சம்பவம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க அந்த மக்கள் தயாரக இருக்கிறார்கள். அதனால் அது தொடர்பான விசாரணைகள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!
செய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

July 30, 2026
சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!

July 30, 2026
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!
செய்திகள்

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

July 30, 2026
13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!
செய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

July 30, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
Next Post
“ரணில் மிகவும் தாமதமாகிவிட்டார்” ; பட்டலந்த அறிக்கை தொடர்பில் அரசின் நடவடிக்கை

"ரணில் மிகவும் தாமதமாகிவிட்டார்" ; பட்டலந்த அறிக்கை தொடர்பில் அரசின் நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.