Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தை

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண்குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் குழந்தையின் பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளதாவது,

கான்யூனிசின் வீடொன்றின் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணியாளர்கள் 25 நாள் பெண் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர் . பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று முற்றாக சிதைவடைந்துள்ள நிலையில் மீட்பு பணியாளர்களிற்கு நம்பிக்கை ஒளியொன்று தென்பட்டது, குழந்தையொன்றின் மிக மெல்லிய அழுகையே அது.

திடீரேன இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்புபணியாளர் ஒருவர் குழந்தையொன்றை தாலாட்டியவாறு வெளியே வந்த போது ஆண்டவனே பெரியவன் என்ற குரல் எழுந்தது. போர்வையால் போர்த்தப்பட்ட குழந்தையொன்றை காத்திருந்த அம்புலன்சிற்கு கொண்டு சென்றனர், அங்கு துணை மருத்துவபிரிவினர் அதனை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்களது வீட்டை தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் தாக்குதலால் அந்த கைக்குழந்தையின் பெற்றோரும் சகோதரனும் கொல்லப்பட்டனர்.

நாங்கள் அங்கு காணப்பட்ட மக்களை கேட்டவேளை அந்த குழந்தை பிறந்து ஒரு மாதம் அதிகாலை முதல் அவள் இடிபாடுகளிற்குள்ளேயே இருந்தால் என அவர்கள் தெரிவித்தனர் என சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஹசென் அட்டர் தெரிவித்தார்.

அவள் அழுவாள் பிறகு மௌனமாகிவிடுவாள்,நாங்கள் அவளை மீட்கும் வரை இந்த நிலையே காணப்பட்டது ஆண்டவனிற்கு நன்றி என குழந்தை மீட்கப்பட்ட தருணங்களை அவர் வர்ணித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

June 20, 2026
மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
Next Post
வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை; ஜனாதிபதி விளக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு