Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவு கூரத் தயாராகி வருகிறது.

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்ட உயிர்கள், காவு கொள்ளப்பட்டமைக்கு, இஸ்லாமிய தீவிரவாதக் குழு மீது உடனடியாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், உளவுத்துறை கசிவுகள், தகவல் தெரிவிப்பவர்களின் சாட்சியங்கள் மற்றும் சூழ்நிலை நிதி தடயங்கள் ஆகியவற்றின் புதிய அலை, இந்தத் தாக்குதல் மிகவும் தீவிரமாக திட்டமிடப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

ஒருவேளை இலங்கை அரசிற்குள் இருக்கும் சக்திவாய்ந்த கூறுகளால் இது திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் இருப்பதாக கொழும்பின் ஆங்கில இணையச்செய்தி ஒன்று கூறுகிறது.

அதேநேரம் 2019 நவம்பரில் ஜனாதிபதியாக வருவதற்காக, கோட்டாபய ராஜபக்ச, தமது நெருங்கிய கூட்டாளி மூலம் தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியளித்திருக்கலாம் என்ற மிகவும் வெடிக்கும் கூற்றும் வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்களுக்கு கசிந்த ஒரு உளவுத்துறை அறிக்கையாக இது கருதப்படுகிறது இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்று குற்றவியல் விசாரணைக்கு உட்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் இணையச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் பெருந்தோட்டத்துறையின் ஒரு முக்கிய நபரே நிதியுதவிக்கான வழியாக செயற்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஒரு சொகுசு விருந்தகத்தின், இயக்குநராகவும் பணியாற்றிய இந்த தொழிலதிபர், சீனி இறக்குமதி ஊழலில் இருந்து பயனடைந்ததாகக் கூறப்படுகிறது.

அவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமாக வழங்கியதாகக் கூறப்படுவதாக ஆங்கில இணையம் தெரிவிக்கிறது.

இந்த நிதி, வெடிபொருட்களை வாங்குவதற்கும், குற்றவாளிகளின் பயணம் மற்றும் தங்குமிடங்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டில் தஞ்சம் கோரிய இரண்டு நடுத்தர தர புலனாய்வு அதிகாரிகள் உட்பட பலர், கோட்டாபய ராஜபக்சவுக்கு விசுவாசமான இலங்கையின் இராணுவ புலனாய்வின் ஒரு இரகசியப் பிரிவு, தாக்குதல் நடத்தியவர்களுக்கு முலோபாய ஆதரவை வழங்கியதாகக் கூறுகின்றனர்.

சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது நண்பர்களை, கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்கு அடையாளம் காணப்படாத அரசாங்க வாகனங்களில் அழைத்துச் செல்வது, பாதுகாப்பான இடங்களில் தற்காலிக தங்குமிடம் வழங்குவது தாக்குதல் நடத்தியவர்கள் கண்டறிவதைத் தவிர்க்க தகவல் தொடர்பு உபகரணங்களை வழங்குவது போன்ற உதவிகளையே, இராணுவ இரகசியப்பிரிவு தாக்குதல் தாரிகளுக்கு வழங்கியதாக ஆங்கில இணையம் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.