இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வாழைச்சேனை சேகரத்திற்குட்பட்ட மருதநகர் மெதடிஸ்த திருச்சபையின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக்குருவும், வடக்கு – கிழக்கு திருமாவட்ட முகாமைக்குருவுமான அருட்பணி டாக்டர் கே. எஸ். நிசாந்த தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது திருமுழுக்கு மற்றும் திடப்படுத்தல் (Confirmation) திருச்சடங்குகள் இடம்பெற்றதுடன், விசேட ஆராதனையும் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பொதுச் செயலாளர் அருட்பணி சுஜிதர் சிவநாயகம் கலந்து சிறப்பித்தார்.
நீண்டகாலமாக திருச்சபைப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதற்காக, அருட்பணி சுஜிதர் சிவநாயகத்திற்கு திருப்பணியாளர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிரான் மெதடிஸ்த திருச்சபையின் அருட்பணி டி. எனோசன், கிராம சேவகர் அ. பிரபு, திருச்சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.















