Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வேலைத்திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வேலைத்திட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல், நேற்று முன்தினம் புதன்கிழமை (18) முற்பகல் “Clean Sri Lanka” செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இந்த வருடத்தில் நாட்டின் 09 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பத்தாயிரம் வாடகை வாகன சாரதிகளுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு 25 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாகாணத்திலும் 10 நிகழ்ச்சிகளை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விரிவான அறிவை வழங்குவதற்கும், முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், போக்குவரத்து சேவைகளை வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டல், சுற்றுலா பயணிகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சேவைகளை வழங்குதல், சுற்றுலா முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான மென்பொருள் செயலியொன்றை அறிமுகப்படுத்துவதுடன், அதன் ஊடாக சுற்றுலாத் துறை தொடர்பான சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தவிர, நட்புடனும் தரமான வகையிலும் வாடிக்கையாளர் சேவையைப் பேணுவதற்கு, முச்சக்கர வண்டி சாரதிகளிடம் சிறந்த மனப்பான்மை மேம்படுத்துதல், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல், அவர்கள் சேவைகள் வழங்கும் பகுதிகள் மற்றும் இடங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (பொறியியல்) எஸ்.பீ.சீ. சுகீஷ்வர, நிதி அமைச்சு, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வட மாகாண சபை, சப்ரகமுவ மாகாண சபை, சுற்றுலா பொலிஸ், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

அதிகாரிகள் குழு, அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம், தேசிய டேக்ஸி எப் சாரதிகள் சங்கம், அனைத்து இணையவழி டெக்ஸி சேவை சாரதிகள் சங்கம், இலங்கை போக்குவரத்து செயலி பயன்பாட்டாளர்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
மூதூர் – கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

மூதூர் - கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.