Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு; எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு!

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு; எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ , இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் பாராளுமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெற்றோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதையாகும். இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தக் குறுகிய நீர்வழிப்பாதை சுமார் 21 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இரண்டு 2 மைல் அகல கப்பல் வழித்தடங்களை கொண்டுள்ளது.

உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீத போக்குவரத்திற்கு இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இது உலகளவில் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த பாதையில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு கூறியிருக்கிறது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு