கொழும்பில் ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆடம்பர சொத்து தொடர்பான விசாரணைகளில் முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் சுமார் 28 அரசியல்வாதிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தரப்புகளிலிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








