ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் தலா 500,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் பிணை வழங்கியதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தது.

இந்த வழக்கு மீண்டும் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.








