இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிய நிலையில் முதல் முறையாக ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளதாக ஈரானின் இராணுவத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.








