வென்னப்புவயில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் கேரள கஞ்சா மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி இந்த சோதனை நடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து 913 கிலோகிராம் 124 கிராம் கேரள கஞ்சா, 02 வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், 44 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடற்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24, 48 மற்றும் 51 வயதுடைய நொச்சியாகம, உலுக்குளம் மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று (03) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 07 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.








