சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சோக் குப்தா இன்று (07) நியமிக்கப்பட்டார்.
ஜியோஸ்டாரில் விளையாட்டு மற்றும் நேரடி அனுபவங்கள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சஞ்சோக் குப்தா, இன்று (07) ஐ.சி.சியின் 7ஆவது தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார்,
2020 ஆம் ஆண்டு இடைக்காலப் பொறுப்பிலும் பின்னர் 2021 ஆம் ஆண்டு முழுநேர அடிப்படையிலும் பொறுப்பேற்ற பிறகு இந்த ஆண்டு ஜனவரியில் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிய ஜெஃப் அலார்டிஸ்க்குப் பதிலாகப் பொறுப்பேற்பார்.








