Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

2 months ago
in அரசியல், செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாகச் செயல்படும் தற்போதைய சூழ்நிலையில், கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியின் நோக்கம் இரு சமூகங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதாக கூறப்படும் நிலையில், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்திலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், கல்முனை உப பிரதேச செயலக வழக்கு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடி வருவதாகவும், இந்த நிலையில் அவர் வழக்கிலிருந்து விலகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை காண முடியுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஏ.எல்.எம். றிபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் இரு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் மாநகர சபைத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் நோக்கங்களை விடுத்து மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
Next Post
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு