ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் கிளீன் ஸ்கூல் வேலை திட்டம் நேற்று (09) நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
அந்த அடிப்படியில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் நேற்று காலை 8.00 மணியிலிருந்து clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் – கிளீன் ஸ்கூல் என்னும் தொனிப்பொருளில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணி இடம்பெற்றது.
குறித்த சிரமதான பணியை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































