“ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பாதாள குழு உறுப்பினரான “கெஹல்பத்தர பத்மே” மற்றும் “கமாண்டோ சாலிண்டா” ஆகியோரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“கனேமுல்ல சஞ்சீவ” கொலைக்குப் பிறகு “கெஹல்பத்தர பத்மே” துபாயில் இருந்து மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட குழு, மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச்செல்ல முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் “கனேமுல்ல சஞ்சீவ” கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியும் உள்ளாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தக் குழு தொடர்பாக இன்டர்போலுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதுடன், தகவல் கிடைத்தவுடன் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








