Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

அதனடிப்படையில் பார்த்தால் பொதுவாக வருடமொன்றில் ஒவ்வொரு நாளும் 100 – 103 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் குடும்பநல விசேட வைத்திய நிபுணர் துராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டில் தற்போது மஹரகம தேசிய புற்றுநோய் தடுப்பு நிறுவனம் உள்ளிட்ட 25 புற்றுநோய் தடுப்பு நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன.

2021ஆம் ஆண்டு வரையிலான தேசிய புற்றுநோய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலதிகமாக கடந்த வருடம் வரையிலான புதிதாக பதிவாகும் புற்று நோயாளர்களின் தரவுகள் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், சாதாரணமாக வருடத்துக்கு நாட்டில் 35,000 – 40,000 வரையிலான நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள். அவ்வாறெனில், 2021ஆம் ஆண்டு 37ஆயிரத்து 753 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை 365ஆல் பிரித்தால் சாதாரணமாக நாளொன்றுக்கு 103 வரையிலான புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் தொகை ஒவ்வொரு வருடத்துடனும் ஒப்பிடும்போது மாற்றம் ஏற்படலாம். இருந்தபோதும் பொதுவாக ஒவ்வொரு வருடமும் நாளொன்றுக்கு 100 – 103 வரையான புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

ஆண்கள் பெரும்பாலும் வாய்ப்புற்றினால் பாதிப்படைகிறார்கள். மேலும், சுவாசப் புற்று, மலக்குடல் புற்று போன்று புற்றுநோய்களால் ஆண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் அதிகம் மார்பகப் புற்றினால் பாதிப்படைகிறார்கள். வருடாந்தம் 5,500 வரையிலான பெண்கள் மார்பகப் புற்றினால் பாதிப்படைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக தைரொய்ட் புற்றுநோய், மூன்றாவதாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று, என்பன அதிகம் பரவலடைகின்றன. மேலும், கர்ப்பப்பை புற்றும் பெண்கள் மத்தியில் அதிகம் பரவலடைந்து வருகிறது.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் பொதுவான புற்றாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று காணப்படுகிறது. அடுத்த வருடங்களில் இந்த புற்றுநோய் ஆண்கள் மத்தியில் பரவலடையும் இரண்டாம் நிலை புற்றாகவும் மாற்றமடையலாம். எனவே, இந்த புற்றுநோயை முன்னரே அடையாளம் காண்பது மிக அவசியமாகும் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு