தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பேருவளை பிரதேச சபையில் கூட்டு நிர்வாகத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் குறித்து பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) மாலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது இந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பில் மக்கள் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் உதய கம்மன்பில போன்ற தலைவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.








