Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.

அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் மாணவன் செல்வன் லக்ஷ்மன் லியோன்சன் ஒன்பது ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளார்.

பிறந்து 26 நாட்கள் கடந்த நிலையில் என்பு நேயினால் பாதிக்கப்பட்டு உபாதைக்குள்ளான லக்ஷ்மன் லியோன்சன் இதற்கு முன்னர் நான்கு சத்திர சிகிட்சைக்கு உட்படுத்தப்பட்டு பல இன்னல்களுக்கு மத்தியிலேயே குறித்த சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.

புனித யோசப்வாஸ் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை தரம் 01 தொடக்கம் தரம் 09 வரை கற்ற இவர் தரம் 10 முதல் தரம் 11 வ கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் கற்றுவந்த நிலையிலேயே குறித்த சாதனையினை நிலைநாட்டி, விபுலானந்தா கல்லூரிக்கும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் லக்ஷ்மன் லியோன்சனின் கல்விச் சாதனையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவமளிக்கப்பட்டதுடன், இவருக்கு தேவையான அனுகு வசதியுடனான சக்கர நாற்காலியினை வழங்குமாறு இதன் போது அரசாங்க அதிபர் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.சந்திரகலா கோணேஸ்வரன் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், சத்திர சிகிட்சைக்கு 40 இலட்சம் தேவைப்படுவதாக கூறியதை செவிமடுத்த அரசாங்க அதிபர் அவர்கள் தனக்கு தெரிந்த வெளிநாட்டில் உள்ள நன்கொடையாளர்கள் மற்றும் மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.முரளிதரன் ஆகியோர் ஊடாக தம்மாலியன்ற உதவியை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.

தனது வீடு தேடி வந்து தன்னை வாழ்த்தியமைக்காக மாவட்ட அரசாங்க அதிபரிடம் லக்ஷ்மன் லியோன்சன் தனது குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு