தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இலங்கையிலிருந்து முதற்கட்டமாக 10,000 தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை – தாய்லாந்து இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் ஜுலாபுன் அமோர்ன்விவாட் கடந்த நவம்பர் 6ஆம் திகதி இதனை அறிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







