Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகனத்தை கோரி  செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

வாகனத்தை கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் கச்சேரிக்கு இன்று புதன்கிழமை (16) பிரயாணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்த இந்த வாகனங்களை பிரதேச சபைகள் காலம் முடிவுற்று கலைக்கப்பட்டதையடுத்து பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் பிரதேச சபைகள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் அந்த நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற புதிய ஆளுநர் பாவிக்காத வாகனங்களை தொடர்பாக அறியத்தரும்படி பிரதேச சபைகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபை செயர்காத வாகனங்களை ஆளநரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டு பிரதேச சபை தவிசாளர்கள் ஆட்சியை பெறுப் பேற்றதையடுத்து மீண்டும் வாகங்களை தேவைக்கு ஏற்ப வழங்குவதற்கு ஆளுநர் முன்னெடுத்துள்ளார்

இருந்தபோதும் பிரதேச சபை தவிசாளர்களுக்கான வாகனம் இல்லாததால் அவர்கள் தமது சேவையைச் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர் எனவே பிரதேச சபைகளில் இருந்து எடுத்து சென்ற வாகனங்களை மீண்டும் வழங்குமாறும் கோரி செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளீதரன், வாழைச்சேனை பிரதேச சபையின் சு.சுதாகரன் ஆகிய இரு பிரதேச சபைகளின் தவிசாளர்களும் இன்று இடம்பெற இருந்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக செங்கலடி பிரதேச சபையின் கழவு அகற்றும் உழவு இயந்திரத்தில் 16 கிலோ மீற்றர் தூரம் பிரயாணித்து மட்டக்களப்பு கச்சேரிக்கு வந்தடைந்தனர்.

இந்த உழவு இயந்திரத்தில் பிரயாணித்த உழவு இயந்திரத்தை கச்சேரி வளாகத்தில் உட்செல்ல விடாது பொலிசார் தடுத்து நிறுத்தி சில நிமிடங்களில் உட்செல்ல அனுமதித்தனர்.

இதேவேளை இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்திநெதி தெரிவிக்கையில்,

நாங்கள் ஒருபோதும் பிரதேச சபைகளின் தவிசாளர்களின் வாகனங்களை பெறவில்லை இவர்கள் ஊடகங்களுக்கு படம் காட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் வந்துள்ளனர் அத்துடன் இவர்கள் கழிவு அகற்றும் வாகனத்தை அந்த வேலைக்கு செல்ல விடாது துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
Next Post
பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவியத்தை நுகர்ந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

பாடசாலை ஒன்றில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவியத்தை நுகர்ந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு