தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.








