Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

1 year ago
in செய்திகள்

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது.

எனினும், கடந்த (16) இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதுடன், கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கணவரான கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது சதீஸ் என்பவர் கைது செய்யப்பட்டமையை உறுதி செய்தார்.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

September 30, 2026
புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

September 30, 2026
8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

September 30, 2026
பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

September 30, 2026
மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
Next Post
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு