Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்; சிவஞானம் சிறீதரன் வலியுறுத்து

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்; சிவஞானம் சிறீதரன் வலியுறுத்து

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 46 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டுக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாகக் கொண்டு வரப்பட்ட பங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது வரையில் நடைமுறையில் உள்ளது.

குறித்த சட்டமானது, ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட நோக்கம் வேறாக இருந்தாலும் பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு உட்பட இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் அது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தச் சட்டத்தின் வலிகளையும், வேதனைகளையும் சுமந்த தரப்பாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசினர் உள்ளனர். அவர்கள் தற்போது இந்தச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கு முனைவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் ஜே.வி.பியினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றுச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள். ஜே.வி.பியின் இந்த மாற்றமானது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச தரப்புக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் உரிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும்.”என வலியுறுத்தினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு