மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
பொலிஸ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது கசிப்பு உற்பத்திக்காக தயாரிக்கப்பட்ட நிலையில் இருந்த 10 பெரல் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், வெற்று பெரல்கள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.








