Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

11 months ago
in செய்திகள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம் பெற்று வரும் நிலையில் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

இதன்போது, இந்த அரசாங்கங்கள் பல வாக்குறுதிளை வழங்கி அவற்றை செய்து வந்தாலும் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் முற்றிலும் மறந்துவிட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இந்த சட்டமூலத்தில் எவ்விதமான பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் சம்பளவிவகாரம் பற்றி உங்களுக்கு நினைவிருக்கின்றதா? என கேள்வியெழுப்பினார்.

அவர்களும் இந்த நாட்டில் தான் வாழ்கின்றார்கள். தேயிலை, றப்பர், தென்னை போன்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த அரசாங்கத்தின் மூலம் 1700 ரூபா அடிப்படை சம்பளமாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால், 1350 ரூபா மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகின்றது.

இதற்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டும். ஏன் அவர்களுக்கு இவற்றை செய்ய முன்வராமல் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனவும் தனது கேள்விகளை முன்வைத்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த ​அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் போதாது என்பதை நாங்கள் அறிவோம். எனினும், அந்த தரப்பினர் சம்பள நிர்ணய சபைக்கு உள்ளே வருகின்றனர். ஆகையால், சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார்.

எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களின் 25 வேலைநாட்களை அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றாற்போல் சம்பளத்தை வழங்க தீர்மானம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றோம்.

நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 1350 ரூபா அத்துடன் 350 ​ரூபா வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால், 1350×25= 33750 ரூபாயாகும் இது, ஏனைய தரப்பினரின் சம்பளத்தை விடவும் அதிகமாகும் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் தரப்பில் இருந்த மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன்போது சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

June 18, 2026
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே
செய்திகள்

மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே

June 18, 2026
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!
செய்திகள்

அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!

June 18, 2026
Next Post
நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு