Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சபாநாயகரை ‘வாயை மூடுங்கள்’ என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

சபாநாயகரை ‘வாயை மூடுங்கள்’ என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று (23) வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

தற்போது வட பகுதியில் உள்ள பல வீதிகள் திறக்கப்படுவதுடன் காணிகளும் விடுவிக்கப்படுகின்றன.

தலதா மாளிகைக்கு முன்பாகவுள்ள வீதி இன்றுவரை வாகன போக்குவரத்துக்காக திறக்கப்படாமல் உள்ளமையானது, கண்டி நகரின் வளிமாசடைவுக்கு பாரியளவில் பங்களிப்பதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் தற்போது பரவலாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அரசாங்கம் கூறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

அதன்போது, குறுக்கிட்ட சபாநாயகர், சுற்றிவளைக்காமல் கேள்வியை மட்டும் கேட்டுமாறு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, கருத்துவெளியிட்ட ரோஹினி கவிரத்ன, இந்த விடயங்களை விபரிக்காமல் கேள்விகளை எழுப்ப முடியாது என தெரிவித்திருந்தார்.

எனினும், சபாநாயகர் தொடர்ந்தும் குறுக்கிட்டதால் வாயை மூடிக் கொண்டு, தாம் கூறுபவைகளை செவிமடுக்குாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்போது, சபாநாயகர் சபை நாகரீகத்துடன் கருத்துகளை வெளியிடுமாறு எச்சரித்திருந்த நிலையில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, ரோஹினி கவிரத்னவின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டதுடன் அதனை மீளப் பெறுமாறு கோரியிருந்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் அமையின்மையின்மை நிலவியது.

எவ்வாறாயினும், தலதா மாளிகைக்கு முன்பாகவுள்ள வீதி மீள திறக்கப்படாமைக்கு காரணமாக என்னவென ரோஹினி கவிரத்ன வினவியிருந்தார்.

அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றால் தலதா மாளிகைக்கு முன்பாக, மூடப்பட்டுள்ள வீதியை அரசாங்கம் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, குறித்த வீதி மூடப்பட்டு 36 வருடங்கள் ஆகின்றமையினால் காவல்துறையிடம் அது தொடர்பாக போதிய தகவல்கள் இல்லை என தெரிவித்தார்.

அத்துடன், தலதா மாளிகை மீதான தாக்குதல் தொடர்பான விடயங்களை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அதுபற்றிய போதிய தகவல்கள் உள்ளதாகவும் முறையாக தேடியறியுமாறும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொலைகாரர்களின் மகளும் தனியார் மனித புதைகுழி வைத்திருப்பவர்களும் எதிர்க்கட்சியில் இருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதனையடுத்து, கருத்துவெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எவரையும் குறிவைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த சபை முதல்வர், 80களின் இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர்களே, வதைக்கூடங்களை நடத்திச் சென்றனர். நாம் உயிருடனேயே இருக்கின்றோம்.

அவ்வாறானவர்களின் பெயரை குறிப்பிடுவது மட்டுமல்ல, விசாரணைகளை முன்னெடுத்து, அவர்களை கைதுசெய்து வழக்கும் தொடருவோம் எனவும் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.