கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய காவலர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கக்கூடும் என ஆரம்பகட்ட விசாரணைகளின்போது கிளிநாச்சி மாவட்ட தடயவியல் பொலிஸ் உத்தியோத்தர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர், உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








