வடக்கின் குடும்ப விழாவாக வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது.
இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாக உள்ளது.
இந்தநிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாகக் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.








