Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய பௌத்த தேரர்; காத்தான்குடியில் சம்பவம்

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய பௌத்த தேரர்; காத்தான்குடியில் சம்பவம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பௌத்த மத தலைவர் ஒருவர் பொலிஸ் சார்ஜன் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய சம்பவம் இன்று காலை (31) காத்தான்குடியில் பதிவாகியுள்ளது.

அம்பலாங்கொட ஸ்ரீ சுதர்ம ராம விகாரையின் விஹாராதிபதியும், மனிதநேய செயற்பாட்டாளருமான பொகவந்தலாக ராகுல தேரரே இவ்வாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த பொலிஸ் சார்ஜனுக்கு மன்னிப்பு வழங்கினார்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் குறித்த பௌத்த மத தலைவர் உணவு விடுதியொன்றில் உரையாடிக் கொண்டிருந்தபோது மேற்படி பொலிஸ் சார்ஜன் குறித்த பௌத்த மத தலைவரின் மீது அவதூறான வார்த்தைகளை பேசி அவரை சிரமத்திற்கு உட்படுத்திய போது குறித்த பொலிஸ் சார்ஜன் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு தன்னை குறித்த பொலிஸ் சார்ஜன் இவ்வாறு சிரமத்திற்க்கு உட்படுத்தியதாக முறையிட்டார்
இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு குறித்த தகவலை மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்த போது குறித்த சார்ஜன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன் பொகவந்தலாக ராகுல தேரரிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இதன் மூலம் குறித்த பொலிஸ் சார்ஜன் என் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கை இல்லாமல் செய்யப்பட்டதுடன் பிரச்சினை சுமூகமாகவும் தீர்த்து வைக்கப்பட்டது.

இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்திய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரத்னாயகாவிற்கு பொகவந்தலாவ ராகுல தேரர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

பொகவந்தலாவ ராகுல் தேரருடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் மௌலவி தாசிம் உட்பட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
Next Post
பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டம்; பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு

பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டம்; பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு