Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலியர்களுக்கான இலவச வீசா சலுகை; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

இஸ்ரேலியர்களுக்கான இலவச வீசா சலுகை; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தமாகவோ அல்லது நிபந்தனையாகவோ இருக்கலாம். ஆனால் இஸ்ரேலியர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதால் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை சந்திக்க நேடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அருகம்பை இஸ்ரேலில் ஒரு கொலனியாக மாறியிருக்கிறது என்பது வெளிநாட்டவர்களுக்கு கூட புரிந்துள்ளது.

நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கசாயம் அருந்தியவர்களைப் போன்று இருக்கின்றனர்.

இஸ்ரேலியர்கள் மொசார்ட்டைப் போன்று இலங்கையில் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் காணப்படுகிறது.

இது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இஸ்ரேலுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று அரசாங்கம் எண்ணுகிறது.

அவர்களுடன் உறவாடினால் இலாபத்தை விட பாரிய இழப்பீட்டை செலுத்த நேரிடும் என்பதையும் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

எந்த அடிப்படையில் கட்டணமின்றி இஸ்ரேலியர்களுக்கு வீசா வழங்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தீர்மானித்தார் என்பது எமக்கு தெரியாது.

இது அமெரிக்காவின் நிபந்தனையாகக் கூட இருக்கலாம். அமெரிக்கா, இஸ்ரேல் என்பவை வெளியுலகுக்கு இரு வேறு நாடுகள் என்ற போதிலும். இன்று அவை இரண்டும் ஒரே நாடுகள் ஆகும்.

இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய அழிவு காத்திருக்கிறது என்றார்.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை
செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

August 15, 2026
இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!

August 15, 2026
ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

August 15, 2026
வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை
செய்திகள்

வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

August 15, 2026
இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
Next Post
கொழும்பில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது

கொழும்பில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு