Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!

43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலர்ந்த கஞ்சாவை காரில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட மூவர் ஹம்பேகமுவ பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில – ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த காரொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 43 கிலோகிராம் 200 கிராம் உலர்ந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காரில் பயணித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவரும், குறித்த கஞ்சா தங்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டவை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், அவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்களோ அல்லது கஞ்சாவைக் கொண்டு செல்வதற்கான உரிய சட்ட அனுமதியோ கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (23) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!

November 23, 2026
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

November 23, 2026
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!
செய்திகள்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!

November 22, 2026
உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!
செய்திகள்

உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!

November 22, 2026
பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு
அரசியல்

பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு

November 22, 2026
லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!

November 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு