Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச லயன்ஸ் கழகம் – மாவட்டம் 306டி, 10 இற்கான புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழா, மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியில் விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் புதிய மாவட்ட ஆளுநராக தெரிவு செய்யப்பட்ட லயன் க. லோகேந்திரன் தலைமையிலான நிகழ்வு, கழகத்தின் திட்ட வழிகாட்டுதலின் கீழ் நடைப்பெற்றது. பிரதம அதிதியாக முன்னாள் சர்வதேச இயக்குனர் லயன் மகேஸ் பஸ்கால் கலந்து கொண்டு சிறப்பித்தார். கலாச்சார முறைப்படி மேளதாளம் மற்றும் வாத்தியக் குழுவுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 52 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் லயன்ஸ் கழக வரலாற்றில், சர்வதேச ரீதியில் முதன்முறையாக மாவட்ட ஆளுநராக லயன் க. லோகேந்திரன் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட முதலாம் ஆளுநர் சாகீர் அகமட் மற்றும் இரண்டாம் ஆளுநர் ரி. ஆதித்தனின் பங்கேற்புடன், கழக அமைச்சரவை உத்தியோகத்தர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கழக செயலாளர் M.T.M. அனாப் மற்றும் பொருளாளர் குணராஜா ஆகியோருக்கு, மாநில ரீதியிலான பொறுப்புகள் ஆளுநரால் ஒப்படைக்கப்பட்டன.

சுகாதார சேவைகள், சமூக நலன் திட்டங்கள் உள்ளிட்ட பலவகை சேவை திட்டங்களை மாவட்ட ரீதியில் விரிவாக்கும் நோக்குடன் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இளம் உறுப்பினர்களை இணைத்து கழகங்களை வலுப்படுத்தும் முன்மொழிவும் வைக்கப்பட்டது.

தமது உரையின் போது, லயன் க. லோகேந்திரன் தம்மை ஆளுநராக தேர்வு செய்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, எதிர்காலத்தில் புதிய சேவைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுக்க அனைத்து கழகங்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டார்.

அமரர் லயன் பா. நிரோசனின் நினைவாக, அவருக்கான நினைவு சின்னம் வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் ச. கார்த்தீபனிடம் வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் லயனஸ் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
Next Post
மஸ்கெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

மஸ்கெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு