Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

1 year ago
in செய்திகள்

இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (07) கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ கவுன்சிலின் 14ஆவது அமர்வின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட அம்சமாகும்.

இதன்போது தற்போதைய காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு அனர்த்த முகாமைத்துவம் செயற்திறனுள்ளதாக்குவதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும் தற்போதைய சட்டத்தை காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்த வேண்டும் என்று குழு முடிவு செய்தது.

அத்தோடு,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான தற்போதைய நிதி வரம்புகளை திருத்துதல், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதியமொன்றை நிறுவவும் முன்மொழியப்பட்டதோடு இதற்கு சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வீடுகளை அடையாளம் காண்பதை விரைவுபடுத்தவும், அந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றவும், அவர்களின் பாதுகாப்பை ஆராயவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்தார்.

இடம்பெயர்வு முகாம்களில் தொடர்ந்தும் இருக்கும் மக்கள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவனம் செலுத்தியதோடு பதுளை பூனாகலையைச் சேர்ந்த 58 குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்வு முகாம்களில் இருப்பதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 58 குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜே.எம். கபில ஜெயசேகர தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
Next Post
3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு