இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் நடைபெற்ற போரானது, ஜூன் 24 ஆம் திகதியன்று 12-ம் நாளை எட்டியபோது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் போர் காலத்தில் ஈரானில் சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பிற்காக சுமார் 21,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









