மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








