Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

நாட்டை கவிழ்க்க எதிர்கட்சியினர் தீட்டும் திட்டத்தை மக்களுடன் முறியடிப்போம்; எம்.பி கந்தசாமி பிரபு

10 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர் கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் ஊடக சந்திப்பு நேற்று (15) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர் கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த வகையில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தனது வீட்டில் எதிர்க்கட்சியினரையும், தோல்வி கண்ட பல எதிர்க்கட்சியினரையும் இந்த நாட்டை வீழ்த்திய இந்த நாட்டை ஒரு வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த 76 வருடங்களை இந்த நாட்டை ஆட்சி செய்து சீரழித்தவர்களை ஒன்று சேர்த்து புதியதொரு சதித்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இவர்களின் இந்த செயற்பாட்டின் ஊடாக நாட்டின் ஸ்த்திரத்தன்மை அல்லது இந்த நாட்டின் அரசியலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் தேசிய மக்கள் சக்தி மீது எமது மக்களின் ஆதரவோடுதான் இந்த அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே மக்களின் மனதை வென்ற இந்த அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு முயற்சியையும் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு இருந்தாலும் அவர்களால் இந்த நாட்டை வீழ்த்த முடியாது, இந்த அரசாங்கத்தையும் வீழ்த்த முடியாது என்பதனை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இந்த நாடு முன்னோக்கி செல்லுகின்ற நேரத்தில் இவ்வாறான சதித்திட்டங்களை இவர்கள் தீட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். இவர்களது சுழ்ச்சியில் சிக்கிடாது இந்த நாட்டை சிறந்த பாதைக்கு கொண்டு சேர்க்கின்ற இந்த அரசாங்கத்திற்கு மேலும் பலத்தை வழங்க கூடியதாக நீங்கள் அமைந்திருக்க வேண்டும். உங்களது பார்வை மிகவும் அவதானமாக செலுத்துங்கள் இவ்வாறான இந்த சூழ்ச்சியில் இருந்து இந்த நாட்டை மீட்பதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இந்த நாட்டிலே ஸ்திகிரமான நிலைமைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

அதேபோன்று எமது பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக ஒரு நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவர இருக்கின்றார்கள் இதனையும் எதிர்க்கட்சியின் ஒரு சூழ்ச்சியாக தான் நாங்கள் கருதுகின்றோம். இவ்வாறான சூழ்ச்சிகளால் இவர்கள் எங்களை வீழ்த்த முடியாது. அத்தோடு இதனை நடைமுறைப்படுத்தவும் முடியாது. இவர்கள் என்னதான் முயற்சிகளை முன்னெடுத்தாலும் இந்த பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும் எந்த ஒரு தீர்மானமும் நிறைவு செய்யப்படாது அவர்களது எந்த சூழ்ச்சியும் இந்த நாட்டில் எடுபடாது என்கின்ற விடயத்தை தெரிவித்துக் கொள்வதோடு. இந்த பிரதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கை இல்லா பிரேரணையில் எந்த ஒரு விடயமும் இல்லை அதே நேரம் இவ்வாறானதொரு நம்பிக்கை இல்லா பிரேரணையை அவர்களால் முன்வைக்க முடியாது. இது எந்த வகையிலும் அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டு இருக்கின்றதா என்கின்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கின்றது. ஆகவே இது தீர்க்கப்பட முடியாத அல்லது பிரேரணிக்க முடியாத ஒரு பிரேரணையாக அமையப் போகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
Next Post
மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

மட்டு வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய நாதன் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.