அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதிலுள்ள ஆற்றுப் பகுதியில் காணப்படும் மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப்பாகங்களை திருக்கோவில் பொலிஸாரால் கடந்த (09) மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப்பாகங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் யுத்த காலங்களில் இப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாகவும் மேலும் பல ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












