Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

மலேசியாவின் – புக்கிட் தம்பூன் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்களுடன் இலங்கையர் ஒருவரையும் உள்நாட்டு பிரஜைகள் இருரையும் மலேசிய காவல்துறையினர் கைது செய்தனர்.

அத்துடன், ஹெரோயின் போதைப்பொருளை பதப்படுத்தும் ஆய்வகமொன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

முதலில் தாமான் தம்பூன் பெர்மாயில் பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு உள்ளூர் பிரஜைகள் கைதாகினர்.

அவர்களிடமிருந்து 1,113 கிராம் ஹெரோயின், 641 கிராம் ஹெரோயின் மூலப்பொருள், 4 கிலோகிராம் காஃபின், பல இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருள் பதப்படுத்தும் கருவிகள் என சந்தேகிக்கப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

பின்னர் இந்த வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், 26 கிலோ காஃபினுடன் இலங்கையர் ஒருவர் கைதானார்.

இரண்டு சோதனைகளிலும் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் 74,500 மலேசிய ரிங்கிட் (சுமார் 53 இலட்சம் ரூபாய்) மதிப்புடையவை என மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான இரண்டு உள்ளூர் பிரஜைகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும்,இலங்கையருக்கு எதிராக குற்றப்பதிவுகள் எதுவும் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி முதல் இந்த குழு செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் உள்ளூர் சந்தைக்காக ஹெரோயின் தயாரித்துள்ளதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை போதைப்பழக்கத்துக்கு அடிமையான சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
பாதாள உலக குழுக்களுக்கு சில முப்படையினரும் ஆதரவு வழங்குவதாக பொலிஸ் மா அதிபர் குற்றச்சாட்டு

பாதாள உலக குழுக்களுக்கு சில முப்படையினரும் ஆதரவு வழங்குவதாக பொலிஸ் மா அதிபர் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு