Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஹர்த்தால் தொடர்பான பிரகாஷின் கருத்து விவசாயிகளைச் சேர்ந்ததல்ல; வாகனேரி விவசாய அமைப்புகள் கண்டனம்

மட்டக்களப்பில் ஹர்த்தால் தொடர்பான பிரகாஷின் கருத்து விவசாயிகளைச் சேர்ந்ததல்ல; வாகனேரி விவசாய அமைப்புகள் கண்டனம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு விவசாயிகள் எதிர்ப்பு என ஊடக அறிக்கை ஒன்றை கே.பிரகாஷ் என்பவர் வெளியிடப்பட்டுள்ளார். அந்த அறிக்கைக்கும் விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, அவர் எந்த விவசாய சங்கத்திலும் பிரதிநிதி இல்லை. எனவே அவரின் அந்த கருத்தை வாகனேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவ தலைவர் கிரான் கமநல அமைப்பின் தலைவர் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வாகனேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவ தலைவர் சி.சண்கதாஸ், கிரான் கமநல அமைப்பின் தலைவர் சி.பவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த கண்டனத்தை விடுத்துள்ளனர்.

“ஊடக செய்தி ஒன்றை நேற்றைய தினம் பார்த்தோம். அதில் நாளை நடைபெறுகின்ற ஹர்த்தாலுக்கு விவசாயிகள் எதிரானவர்கள் என கே. பிரகாஸ் என்பவர் ஊடக அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கைக்கும் எங்களது விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. அவர் விவசாயிகள் சங்கம் ஒன்றிலும் இல்லை எனவே அவரின் அந்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேவேளை ஹர்த்தால் தொடர்பாக எவரும் ஆதரவு கேட்கவில்லை. விவசாயிகள் அதற்கு எதிர்ப்பே அல்லது ஆதரவே என ஒன்று கூடிய தீர்மானமும் எடுக்கவில்லை, முடிவும் எமது அமைப்பு எடுக்கவில்லை. இது அவர் தான்தோண்றித்தனமாக தனித்துவமான ஒரு கருத்தை விவசாய சமூகத்தின் மீது திணிப்பது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

எனவே அவரும் அவர் சாந்தவரும் இதுபோன்ற எமது விவசாய சமூகத்தை இழிவுபடுத்தும் ஒரு அரசியல் நடவடிக்கையாக கொண்டுசெல்லும் ஒரு துர்பாக்கிய நிலமையை ஏற்படுத்தாமல் அவர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை வழங்குவதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. ஆனால் எமது விவசாய சமூகத்தின் கருத்துக்களாக திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எமது விவசாய அமைப்புகளில் மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருந்து வருகின்றனர். எனவே அதில் நாங்கள் கவனமாக கையாளவேண்டியுள்ளது என்பதுடன் எமது கூட்டத் தீர்மானத்தின்படியே பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கின்றோ.ம் தனிமனிதனாக முடிவு எடுப்பதில்லை. எனவே இவர் கூறிய கருத்துக்கும், விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என உறுதியாக கூறுவதுடன், அவர் எந்த விவசாய அமைப்பிலும் பிரதி நிதியாக இல்லை’ என்றார்.

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள குரல்
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
ஜெனரேற்றருக்கான டீசல் வவுச்சரில் 6600 ரூபாயை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி கைது

ஜெனரேற்றருக்கான டீசல் வவுச்சரில் 6600 ரூபாயை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.