Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு; சேவைகளை தொடர இணக்கம்

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு; சேவைகளை தொடர இணக்கம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை இன்று (24) மாலை 4.00 மணி முதல் மேற்கொள்ள இணங்கியுள்ளதாக, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர், அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தபால் தொழிற்சங்கத்தினர், கலந்துரையாடலில் ஏற்பட்ட விடயங்கள் தொடர்பான எழுத்து மூலமாக வழங்கப்படும் வரையில் தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.

கலந்துரையாடலின் இறுதி முடிவு தொடர்பின் இன்னும் கூற முடியாது. ஒரு சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவை எழுத்துப்பூர்வ ஆவணமாக வழங்கப்பட வேண்டும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய  சாணக்கியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய சாணக்கியன்!

September 18, 2026
Next Post
நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு